இந்தியாவுக்கு 390 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா: மீண்டும் இமாலய இலக்கு!

ஞாயிறு, 29 நவம்பர் 2020 (13:11 IST)
இந்தியாவுக்கு 390 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 389 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பின்ச் அபாரமான தொடக்க ஆட்டத்தை கொடுத்தார்கள் என்பதும் இருவரும் தலா 83, 60 ரன்கள் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த போட்டியில் செஞ்சுரி அடித்து அசத்திய ஸ்மித் இன்றைய போட்டியிலும் 104 ரன்கள் அடித்து செஞ்சுரி அடித்தார் என்பதும் லாகிசாஞ்சே 70 ரன்களும் மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 390 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்