ஒரே ஓவரில் சதம் அடித்த வார்னர், மார்ஷல்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (16:15 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் களமிறங்கிய நிலையில் சற்றுமுன் இருவரும் ஒரே ஓவரில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர் 88 பந்துகளில் 101 ரன்களும் மிட்செல் மார்ஷ் 103 பந்துகளில் 108 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது
இதே ரீதியில் சென்றால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 400 ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.