விறுவிறுப்பாக நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டாஸ் 66 ரன்னும், ஹசன் 51 ரன்னும், மஹ்முதுல்லா 46 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழ்ப்பிற்கு 256 ரன்கள் அடித்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் சதம் அடிப்பதற்காக கோலி, பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார். சிங்கிள் எடுக்கவில்லை. இது கோலி சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக அவர் மேல் குற்றச்சாட்டு எழவும் காரணமாக அமைந்துள்ளது.