2nd ODI: இந்திய அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்கு !

சனி, 21 ஜனவரி 2023 (16:55 IST)
2 வது ஒரு நாள் போட்டியில்,இந்திய அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டில் நடந்து வருகிறது.

இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்த நிலையில், தொடக்க வீரர்கள் ஆலன், கன்வே, நிகோலஸ், லதாம், ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

இதையடுத்து களமிறங்கிய பிலிப்ஸ் 36 ரன்களும், பிரேஸ் செல் 22 ரன்களும், சான்டர் 27 ரன்களும் அடித்து,  10 விக்கெட் இழப்பிற்கு 34.3 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தனர்.

இந்த எளிய இலக்கை நோக்கி ரோஹித் தலைமையிலான் இந்திய அணி எளிதில் வெற்றி பெரும் என தெரிகிறது.

 இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்டுகளும்,சிராஜ், பான்ட்யா, சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்