பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு 2 வது குழந்தை

புதன், 23 ஆகஸ்ட் 2023 (14:20 IST)
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு  2 வது குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் செரீனா வில்லியம்ஸ்.  டென்னிஸ் விளையாட்டு உலகின் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்த அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு, டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவரது கணவர் அலெக்சிஸ். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார்.

இந்த  நிலையில், இத்தம்பதியர்க்கு  2 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி செரீனா வில்லிம்ஸின் கணவர் அலெக்சிஸ் ஓஹானியர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,' தங்களின் 2 வது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் என்று பெயரிட்டுள்ளதாக' குறிப்பிட்டுள்ளார். இத்தம்பதியர்க்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்