உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு கொடுத்த நியூசிலாந்து.!

புதன், 18 அக்டோபர் 2023 (18:08 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானின் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர் யங் 54 ரன்கள் அடித்தார் என்பதும் கேப்டன் டாம் லாதான் 68 ரன்கள், பிலிப்ஸ் 71 ரன்கள் அடித்தனர். 
 
இந்த நிலையில் 289 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான அணி பேட்டிங் செய்ய உள்ளது. அந்த அணி நியூசிலாந்து அணியை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்