இந்திய அணிக்கு இமாலய இலக்கு கொடுத்த தென்னாப்பிரிக்கா!
வியாழன், 6 அக்டோபர் 2022 (19:00 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது
இன்றைய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது என்பதும் இதன் காரணமாக 40 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 250 என்ற இமாலய இலக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் எட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.