இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீண்: மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வியாழன், 6 அக்டோபர் 2022 (13:08 IST)
இந்தியாவில் தயாரான தடுப்பூசிகளில் சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல்.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,04,463 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,745 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,43,436 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 32,282 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தயாரான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 218 கோடி டோஸ்களுக்கும் மேல் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்தியாவில் தயாரான தடுப்பூசிகளில் கடந்த மாதம் இறுதி வரை சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 என்று வைத்துக்கொண்டால் வீணான தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.2,250 கோடி ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்