இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன போதிலும், கேப்டன் விராட் கோலி அதிரடியாக பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்களுக்கும் பவுண்ட்ரிகளுக்கும் திருப்பினார். ஒரு பக்கம் கே.எல்.ராகுல் அதிரடியாக பேட்டிங் செய்து 91 ரன்கள் எடுக்க, இன்னொரு பக்கம் விராத் அதிரடியாக விளையாடி70 ரன்கள் எடுத்ததால் இந்திய அணியின் ஸ்கோர் 240 ஆக உயர்ந்தது