இலங்கை அணிக்கு 226 இலக்கு கொடுத்த இந்தியா!

வெள்ளி, 23 ஜூலை 2021 (20:17 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு இந்தியா 226 ரன்கள் என்ற இலக்கை கொடுத்துள்ளது 
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்று விட்டதால் தொடரை வென்று விட்டது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இடையில் மழை பெய்ததால் 47 ஓவராக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 226 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி களத்தில் இறங்க உள்ளது என்பதும், இலங்கை அணிக்கு இந்த போட்டி ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்