200க்கும் இலக்கு கொடுத்த குஜராத்.. கொல்கத்தா வெற்றி பெறுமா?

ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (17:19 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணி கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்காக கொல்கத்தாவுக்கு கொடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு கட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் சங்கர் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார் என்பதும் அதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அசத்தினார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட்டுக்களையும்,  சுயாஷ் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
இந்த நிலையில் 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் ஒரு சில நிமிடங்களில் கொல்கத்தா அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்