இந்த தகவலின்படி, 2025 ஐபிஎல் போட்டிகள் மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மார்ச் 14 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
கடந்த சீசனை போல், இந்த சீசனிலும் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஒருசில நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இறுதி போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.