ராஜஸ்தான் ராயல்ஸ் அண்யின் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ் செயதது. அந்த போட்டியில் அசுர பார்மில் இருந்த சஞ்சு சாம்சன் கடைசி ஓவரின் ஐந்தாவது பாலில் எதிர்முனையில் மோரிஸ் இருக்க சிங்கிள் ஓடுவதைத் தவிர்த்தார். அதற்கடுத்த பாலில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பவுண்டரி எல்லைக்கு அருகே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனால் போட்டி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் இரண்டாவது போட்டியில் மோரிஸ் 4 சிக்ஸர்களை விளாசி வெற்றி பெறவைத்தார். அதன் பின்னர் சஞ்சு சாம்சனிடம் மோரிஸின் அதிரடிக்குப் பிறகு உங்கள் முடிவை மாற்றுவீர்களா எனக் கேட்டபோது இன்னும் 100 முறை அந்த போட்டி நடந்தாலும், ஐந்தாவது பந்தில் நான் சிங்கிள் ஓடியிருக்க மாட்டேன். எனக் கூறியுள்ளார். அதே போல மோரிஸும் அன்றைய போட்டியில் சஞ்சு என்னைவிட அதிக பார்மில் இருந்தார். அதனால் அவர் செய்தது சரியான முடிவுதான் எனக் கூறியுள்ளார்.