பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் கங்கூலி, திராவிட் தர நிலை குறையும்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய நிர்வாகிகளின் கையில் கடினமான இலக்கு ஒன்று உள்ளது. அதாவது பி.சி.சி.ஐ. கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை தயாரிப்பதுதான் இந்த புதிய நிர்வாகிகளின் முன் உள்ள பெரிய சவாலாகும்.

பி.சி.சி.ஐ. புதிய தலைவர் ஷஷான்க் மனோகர், செயலர் ஸ்ரீனிவாசன், அணித் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களின் மைய ஒப்பந்தப் பட்டியலை வெளியிடும்போது புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

தற்போது வீரர்கள் 4 விதமான படிமுறைகளில் தர நிலைப்படுத்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். ‘’ ஒப்பந்தம் - இதில் வரும் வீரர்களுக்கு ஆண்டிற்கு ரூ.60 லட்சம் ஒப்பந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பி’ ஒப்பந்தம் - இதில் வரும் வீரர்களுக்கு ரூ.40 லட்சமும், ‘சி’ ஒப்பந்தத்தில் வருபவர்களுக்கு ரூ.25 லட்சமும், ‘டி’ ஒப்பந்த வீரர்களுக்கு ரூ.15 லட்சம் என்றும் ஒப்பந்தத் தொகைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இதில், மைய ஒப்பந்தத்தில் இடம்பெறாத வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடினால் அவர்கள் தாமாகவே ‘டி’ ஒப்பந்தப் பிரிவிற்குள் வருகின்றனர்.

தற்போது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்படாத ‘’ ஒப்பந்தத்தில் உள்ள வீரர் சௌரவ் கங்கூலி. இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால் இவர் தொடர்ந்து ‘’ ஒப்பந்தப்பட்டியலில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இனிமேல் சௌரவ் கங்கூலி இடம்பெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டிகளின் பக்கம் இனி வரமுடியாத மற்றொரு ‘’ ஒப்பந்த வீரர் ராகுல் திராவிட். இவரும் புதிய ஒப்பந்தப் பட்டியலில் ‘’ பிரிவில் இருப்பாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் மைய ஒப்பந்தத்தில் தர நிலை இறக்கப்பட்டு ‘பி’ ஒப்பந்தத்தில் இடம்பெறச்செயலாம் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் சூசகமாக தெரிவிக்கின்றன.

வி.வி.எஸ்.லக்ஷ்மண் தற்போது ‘பி’ ஒப்பந்தப் பிரிவில் உள்ளார். இவரது இடமும் ‘சி’ பிரிவிற்கு தள்ளப்படலாம்.

மற்றொரு வீரர் அனில் கும்ளே. இவர் இந்திய அணியின் தலைவராக இருப்பதால் ‘’ பிரிவில் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது. ஆனால் திராவிட், கங்கூலி ஆகியோரின் பங்களிப்பை வைத்து அவர்களும் ‘’ பிரிவில் தக்கவைக்கப்படலாம் என்று வேறொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனி, ஜாகீர் கான், சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து ‘’ ஒப்பந்தத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

டெஸ்ட், ஒரு நாள், இருபதுக்கு 20 ஆகிய மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வரும் ஹர்பஜன், சேவாக் ஆகியோர் தற்போது ‘பி’ ஒப்பந்தத்திலிருந்து உயர்வு பெற்று ‘’ ஒப்பந்த வீரர்களாக்கப்படலாம் என்று தெரிகிறது.

சவால்களையும், கேள்விகளையும் எழுப்பவுள்ள இந்த வீரர்கள் மைய ஒப்பந்த விவகாரத்தை புதிய நிர்வாகிகள் எப்படி திருப்திகரமாக முடிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்