கிப்ஸின் குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை

திங்கள், 1 நவம்பர் 2010 (17:13 IST)
FILE
தென் ஆப்பிரிக்க துவக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் எழுதியுள்ள சுயசரிதையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களைப் பற்றியும் அந்த அணியின் செயல்பாடுகள் பற்றியும் கூறிய தகவல்கள் கிரிக்கெட் உலகில், குறிப்பாக தென ஆப்பிரிக்க வீரர்களிடத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் சூதாட்டப் புகாரில் தடை செய்யப்பட்டு மீண்டும் வந்த ஒரு வீரர் தன் அணியைப் பற்றி அவதூறு பேசுவதில் நியாயமில்லை என்றே தோன்றுகிறது.

இன்று வெளியாகும் இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளை இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

காமக் களியாட்டங்கள், போதை மருந்தான மருஜுவானா எடுத்துக் கொண்டது, மற்றும் வீரர்களிடையே பிரிவினையைத் தூண்டி விடும் வீரர்கள் பற்றிய விவரங்களால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஆட்டம் கண்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்ட்ரேலியப் பயணம் மேற்கொண்டபோது அந்த அணியின் வீரர்கள் பெண்களுடன் கும்பலாகக் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சிக் குற்றச்சாடு எழுப்பியுள்ளார் கிப்ஸ். மேலும் 4 வீர்ர்களவெற்றியககொண்டாமேற்கிந்திதீவுகளில் 2001ஆமஆண்டமரிஜுவானஎன்போதமருந்தஎடுத்துககொண்டதையுமஅவரகுறிப்பிட்டுள்ளார். அந்த 4 வீரர்களுமஇன்றஅணியிலஇல்லஎன்பதுமகுறிப்பிடத்தக்கது.

மேலுமதெனஆப்பிரிக்அணி வீரர்களிடத்திலபிரிவினையஏற்படுத்துபவரஸ்மிதஎன்றகுறிப்பிட்டுள்ளததற்போதஅவர்களிடையபெருமவருத்தத்தஏற்படுத்தியுள்ளது.

"இந்த அணி கிரேம் ஸ்மித், மார்க் பௌச்சர், ஜாக் காலிஸ், சமீபமாக ஏ.பி. டிவிலியர்ஸ் ஆகிய மூத்த வீரர்களால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் குழு அணியில் பிளவுகளை ஏற்படுத்தி ஒரு அணி என்ற உணர்வு ஏற்படுவதை தடுத்து வருகிறது. ஒரு அணி என்ற உணர்வு தென் ஆப்பிரிக்க வீரர்களிடையே உருவாக வாய்ப்பேயில்லை."

சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால் கிரேம் ஸ்மித் என்பவரே அணியில் அதிகாரம் படைத்தவர் அவரது ஆதரவின்றி ஒருவரும் அணியில் நீடிக்க முடியாது." என்று கிப்ஸ் தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன் மறைந்த ஹேன்சி குரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டது அம்பலமான பிறகே தென் ஆப்பிரிக்க அணி தன் உணர்வை இழந்து விட்டது என்று கூறியுள்ளார் கிப்ஸ்.

"அதன் பிறகு விவகாரம் சுலபமாக இல்லை. நான் உண்மையில் குரோனியேவுக்கு பிறகு கேப்டனான ஷான் போலாக் மீது பரிதாபப் படுகிறேன், அவர் மிகவும் தடுமாறினார். ஆனால் போலாக்கிற்குப் பிறகு அணியின் ஒருமித்த உணர்வில் சரிவு ஏற்பட்டது." என்று கூறுகிறார் கிப்ஸ்.

கிப்ஸின் இந்த வெளியீடுகள் ஒரு புறம் இருக்கட்டும். அதில் பாதி உண்மையாக இருக்கலாம், பாதி இவராகவே கற்பனை செய்ததாக இருக்கலாம். ஆனால் கிப்ஸ் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் கறுப்பரின வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்கான இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதனை பல வெள்ளை வீரர்கள் இன்று வரை விமர்சனம் செய்தே வருகின்றனர். இந்த நிலையில் ஸ்மித் பற்றி இவர் குறிப்பிடுவதில் உண்மை இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆனால் கிப்ஸ் கூறுவது போல் தென் ஆப்பிரிக்க அணி ஸ்மித் தலைமையில் ஒருமித்த அணி என்ற உணர்வை இழந்து விட்டது என்பதை நம்புவதற்கு இடமில்லை. ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவுக்குச் சென்று அந்த மண்ணில் அந்த பலமான அணியை 2- 1 என்று வீழ்த்தி டெஸ்ட் தொடரில் அவர்களை முதலிடத்திலிருந்து மண்ணைக் கவ்வச் செய்தார் ஸ்மித்.

இந்தியாவில் இதுவரை டெஸ்ட் தொடரைத் தோற்காத ஒரே கேப்டன் என்ற பெருமையும் ஸ்மித்திற்கு மட்டுமே உண்டு.

காமக் களியாட்டம், மரிஜுவானா புகைப்பழக்கம், மது அருந்திவிட்டு கார் ஓட்டுதல் போன்றவை பற்றி கிப்ஸ் கூறுவது பற்றிய தெளிவான ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றே தோன்றுகிறது.

மாறாக இரவு நேர களியாட்டங்களில் ஈடுபட்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டிய வழக்கில் கிப்ஸ்தான் ஏகப்பட்ட முறை சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாவற்றையும் விட கிரிக்கெட்டின் அந்திமக் காலம் நெருங்கி விட்ட வீரர்கள் சுயசரிதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி புத்தக விற்பனையை மும்முரமாகத் துவக்கி வைப்பதும் இப்போது அதிகம் நிகழ்ந்து வருகிறது. அந்தக் கோணங்களிலிருந்தும் கிப்ஸின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை நாம் அணுகலாம்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறாத கிப்ஸ், எப்படி தென் ஆப்பிரிக்க ஓய்வறை அணி உணர்வைப் பற்றியெல்லாம் குறிப்பிட முடியும்?

காமக் களியாட்டம் குறித்து கிப்ஸ் குறிப்பிடும் ஆஸ்ட்ரேலிய தொடர் 1998ஆம் ஆண்டு தொடராகும். எனவே 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றை தற்போது இருக்கும் அணி மீதான குற்றச்சாட்டாகக் கூறமுடியாது.

அணியின் முன்னாள் வீரர்கள் தங்கள் வாய்ப்புகள் மங்கி வரும் சூழலில் தாங்கள் விளையாடிய அணி வீரர்கள் பற்றி, அவர்கள் உண்மையில் தவறு செய்திருந்தால், அதனை அப்போதே உலகிற்குத் தெரியப் படுத்தாமல் அனைத்தையும் சுயசரிதைக்கு ஒதுக்கி வைத்துக் கொள்வது வணிக உத்திதானே தவிர வேறொன்றுமாகவும் இருக்க வாய்ப்பில்லை.

ஹேன்சி குரோனியேவுடன் சேர்ந்து சூதாடியதாக் கிப்ஸும் 6 மாத காலம் தடை செய்யப்பட்டார். பிறகு அவரது பல்வேறு நடவடிக்கைகளுக்காக காவல்துறையாலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு வீரர் இது பொன்ற ஒரு குற்றச்சாட்டை தன் அணி மீதும் சக வீரர்கள் மீதும் வீசுவது சரியல்ல என்றே தோன்றுகிறது.

மேலும் இது ஒரு முடிவற்ற செயல் நாளை ஸ்மித் ஒரு புத்தகம் எழுதுவார் அதில் கிப்ஸின் லீலைகளை அம்பலப்படுத்த முடிவெடுப்பார். இது முடிவுறா செயல்.

அரசியல்வாதிகள்தான் இதனை முழு ஆற்றலுடன் செய்ய முடியும். கிரிக்கெட் வீரர்களுக்கு இது தேவையற்ற வேலை.

கிப்ஸ் ஒரு அபாரமான வீரர். சாம்பியன் கோப்பை போட்டி ஒன்றில் இலங்கையில், இந்தியாவுக்கு எதிராக இவர் தனி மனிதனாக சதம் எடுத்ததும், அவர் காயமடைந்து வெளியேறிய பிறகு அந்த அணி தோல்வியடைந்ததும் நினைவுக்கு வருகிறது. அது ஒரு அபார இன்னிங்ஸ்.

அதே போல் ஆஸ்ட்ரேலியா அணி 434 ரன்களை ஒருநாள் போட்டி ஒன்றில் குவிக்க அதனை துரத்தும் போது கிப்ஸ் 120 பந்துகளில் 175 ரன்களை விளாசியதும் கிப்ஸின் நினைவலைகளாக இருக்க வேண்டும்.

2007 உலகக் கோப்பையில் முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சரகளை அடித்ததும் கிப்ஸின் திறமைக்குச் சான்று.

அவரது எழ்த்து அவரது பேட்டிங்தானே தவிர அவர் இப்போது கூறும் அவதூறுகள் அல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்