தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்!!

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.
முதற்படை வீடு - திருப்பரங்குன்றம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
 
இரண்டாம்படை வீடு - திருச்செந்தூர்: திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும்  சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.
 
மூன்றாம்படை வீடு - பழனி: திருவாவினன்குடி முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த அறுபடை  வீடுகளில் ஒன்றான இக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம்  தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில்  கூறப்படுகிறது.
 
ஐந்தாம்படை வீடு - திருத்தணி: திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம்  புரிந்துகொண்ட இடமே திருத்தணி.
 
ஆறாவதுபடை வீடு - பழமுதிர்சோலை: பழமுதிர்சோலை முருகனின் ஆறாவது படைவீடு ஆகும். இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர்  பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்