குங்குமத்தை மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் போன்றவற்றால் செய்வதனால் கிருமி நாசியினியாக செயல் புரியும். இதனை மைய பகுதியில் வைப்பதால் மூளைக்கு செல்லும் நரம்புகளின் வெப்பத்தை தணிக்கும் தன்மை கொண்டது.
நெற்றியில் மஞ்சள் வைப்பதால் நோய்க்கிருமிகளை விரட்டுகிறது. மஞ்சள் வைக்கும் பொழுது அதன் மேல் படும் கற்று நம் முகத்தை சுற்றி தான் இருக்கும். மஞ்சள் துர் கிருமிகளை அண்டவிடாது. நாம் சுவாசிக்கும் பொழுதும் நோய்க்கிருமிகள் இல்லாத சுத்தமான காற்றை சுவாசிக்க உதவி புரியும். நெற்றியில் மஞ்சள் வைத்து கொள்வதால் மருத்துவ குணங்கள் கிடைப்பதால், இதனை அதிகம் பயன்படுத்தலாம். முகத்தில் மஞ்சள் அடிக்கடி பயன்படுத்தினால் கிருமிகளை அண்டவிடாது.