இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். அனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். ஆயினும் அடிப்படை அம்மன் வழிபாடு.
விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது, கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
துர்க்கை மகிசாசூரனை அழித்தொழித்த நாளே விஜயதசமி என்பது, வடக்கே உள்ள ஐதிகம். பராசக்தியே துர்க்கை வடிவம். தசராவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவர்.