சக்தியின் புராணக் கதை:
தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும், கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள் சக்தி.
இதனால் கோபமடைந்த சிவன், இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு கோரதாண்டவம் ஆடினார். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தார். அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதிப் போற்றப்படுகிறது.