ஸ்ரீ கருட பகவானுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
ஞானம், பலம், ஐஸ்வர்யம், விர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி, ப்ராகாம்யம் ஆகிய எட்டு விதமான சமப்த்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவர்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.
கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.