சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அவ்வேளையில் சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது. அந்த வைப்ரேஷன் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.
நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும். அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.