கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது. இதற்கு அறிவியல் பூர்வமாகவும் சான்றுகள் உள்ளன.வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும்.இதனால் இதய கோளாறுகள்,நரம்பு தளர்ச்சி உண்டாகும்.மூளை பாதிப்படையும்.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் வைத்து தான் தூங்க வேண்டும். இடதுபுறமாக ஒரு கழுத்து வைத்து தூங்க வேண்டும். அப்படி தூங்கும் போது வலது மூக்கில் சுவாசம் சூரிய கலையில் ஓடும். இதில் 8 அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மேலும் உடலுக்கு தேவையான வெப்ப காற்று அதிகரித்து பித்த நீர் அதிகம் ஆகி உணவு எளிதாக செரிமானம் அடையும். இதயத்திற்கு சீரான பிராண வாயு கிடைத்து இதயம் பலப்படும்.