மேலும் மகாசமாதி, விதர்க்க சமாதி, விசார சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி ஆகிய வேறு வகைகளும் உண்டு.
பதினெட்டு சித்தர்களில் தன்னை ஒடுக்கி முதலில் ஜீவசமாதி நிலை அடைந்தவர் சித்தர் திருமூலரே. ஜீவசமாதிகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்தும், அவற்றின் விதிமுறைகள் குறித்தும் திருமூலரின் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது. 'சமாதிக் கிரியை' என்ற தலைப்பில் விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.