வாஸ்துப்படி எந்த திசையில் எந்தெந்த அறைகள் அமைவது நல்லது

"வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த  அறிவுத்துறையாகும்.
பூஜை அறை வடகிழக்கு திசையில் இருப்பது நல்லது. அங்கே பிராணவாயு அதிகம் கிடைக்கும் பகுதி என்பதால், உங்களால் ஆழ்நிலை தியானத்துக்கு எளிதில் செல்ல முடியும். குளியலறை மற்றும் கழிப்பறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். நீரின் போக்கு சீராக இருக்கும் திசை என்பதால், வாஸ்து சாஸ்திரம் பொதுவாக இந்தத் திசைகளைப் பரிந்துரை செய்கிறது.
 
வரவேற்பறை எனும் ஹால் பகுதி ஒரு வீட்டுக்கு இதயம் போன்றது. எனவே, அது ஒழுங்கான சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது கட்டாயம். வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் ஹால் இருப்பது நல்லது. சின்னச் சின்னதாக நிறைய அறைகள் அமைப்பதைவிட, நான்கு அல்லது ஐந்து அறைகள் விசாலமாக இருப்பது நல்லது. அது மனரீதியாக உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.
வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் அதிக கனமான பொருள்களை வைக்கக் கூடாது. பொதுவாக உங்கள் வீடு தூய்மையாக இருந்தாலே அது நல்ல அதிர்வுகளை உங்களுள் உருவாக்கி வளர்ச்சியைத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்