செவ்வாய் கிழமை பிரதோஷத்தின் வழிபாட்டு பலன்கள் !!

செவ்வாய், 29 மார்ச் 2022 (10:13 IST)
இன்று செவ்வாய்க் கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது.


எனவே, இந்த அற்புதமான நாளில் நாளைக் காலை நீராடி, நீறுபூசி சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். உடலால் இயன்றவர்கள் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு சிவ நாமம் ஜபித்தபடி இருக்கலாம்.

மாலை வேளையில் சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டும். ஆலய தரிசனத்துக்கு வாய்ப்பில்லாததால் வீட்டிலேயே இருக்கும் சிவபெருமானின் படத்துக்கு மலர்சாத்தி எளிய நிவேதனம் ஒன்றைச் செய்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்து வேண்டிக்கொள்வதன் மூலம் சிவனருள் கிடைப்பதோடு, நோய், கடன், பகைவர்களால் தொல்லை முதலியவை நீங்கும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும். செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். மேலும் பித்ரு தோஷமும் விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்