பிரதோஷ நேரத்திலே வழிபடும் முறைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

செவ்வாய், 29 மார்ச் 2022 (12:30 IST)
சிவபெருமானை வணங்க செல்பவர்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதோஷ வேளையில், கருவறை ஈசனை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தரிசிக்க வேண்டும்.


அங்கேதான் தேவர்களுக்கு சந்தியா நிருத்தத் தை ஈசன் ஆடிக்காட்டியருளினார். பிரதோஷ வேளையில் நீலகண்டப் பதிகத்தையும் பாராயணம் செய்வது விசேஷம்.

பிரதோஷ வேளையில் ஈசன் ரிஷபத்தின் மீது ஆலயவலம் வரும்போது, மூன்றாவது சுற்றில் ஈசான (வடகிழக்கு) திக்கில் நடைபெறும் வழிபாட்டை தரிசிப்பது சிறப்பான புண்ணியம் தரும்.

ஈசான திக்கில், ஈசன் ஆலகால விஷமருந்தி பின் எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியபோது கூடவே பூதகணங்களும் பூதநிருத்தம் ஆடின. இதற்கென பிரத்யேகமாக ராகம், தாளம், வாத்தியம் உண்டு.

பிரதோஷ நேரத்தில் ஈசனுக்கு வில்வ தளங்க ளால் மாலை தொடுத்து அணிவிப்பது பெரும் பாக்கியம் தரும். பிரதோஷ வேளை, ரஜ்னிமுக வேளை என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு இரவின் முகம் என்பது பொருள். தோஷம் என்றால், குற்றமுள்ள என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. குற்றமற்ற அந்த வேளையில் ஈசனைத் தொழ, நம் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஈசன் விஷத்தையுண்டு, சயனித்து, பிறகு எழு. ந்து முதன்முதலாக சந்தியா தாண்ட வத்தை ஆடியது ஒரு சனிக்கிழமை மாலையில்தான் என்பதால் சனிப்பிரதோஷம் சிறப்பானது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பிரதோஷ தரிசனம் செய்பவர்களுக்கு சிவலோக பதவி கிட்டும்.

பிரதோஷ வேளையில் ஈசன் ஆடும் தாண்டவத்திற்கு அம்பிகை பாட, நான்முகன் தாளம் போட, சரஸ்வதி வீணைமீட்ட, நரநாரா யணர்கள் மத்தளம் இசைக்க, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, லட்சுமி கஞ்சிரா இசைக்க, ஏழுகோடி இசைக்கருவிகளை கந்தர்வர்கள் மீட்டுவதாக ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்