பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

செவ்வாய், 29 மார்ச் 2022 (10:46 IST)
செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். மேலும் பித்ரு தோஷமும் விலகும்.


செவ்வாய் கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது.

தினமும் சூரியன் மறையும் மாலை வேளையில் 4.30 முதல் 6 மணிவரையிலான நேரத்தைப் பிரதோஷ காலம் என்றே அழைப்பார்கள். அதிலும் திரயோதசி திதி அன்று வரும் பிரதோஷ காலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே அந்த நாளை 'பிரதோஷம்' என்றே அழைக்கிறோம்.

பொதுவாகவே பிரதோஷ வழிபாடு பிரச்னைகளைத் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்தியம் பெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் காண்பதன் மூலம் நம் மனத்துயர் எல்லாம் விலகும் என்கிறார்கள் அடியவர்கள்.

செவ்வாய்கிழமை பிரதோஷ வேளை புதன் மற்றும் சந்திரனின் ஓரையில் அமையும். அந்த வேளையில் சிவ வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருள் நமக்குக் கிடைக்கும்.

ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலையால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். செவ்வாயின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதால் நோய் மற்றும் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்