தஸ்லிமா நஸ் ரீன் புதிய புத்தகம் ஒரு நாளில் விற்றது!

வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (13:16 IST)
சர்ச்சைக்குரிய எழுத்தாளராக சித்தரிக்கப்பட்ட வங்கதேசத்தின் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் புதிய புத்தகம் "நிர்பசன்" கொல்கட்டா சர்வதேச புத்தக விழாவில் ஒரே நாளில் விற்றுத் தீர்த்தது.

1000 பிரதிகளே அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்த இந்த புத்தகம் ஒரேநாளில் விற்றுத்தீர்த்துள்ளது.

ஆனால் தனது புத்தகங்கள் சர்ச்சையினால் விற்கப்படுவதை தான் ஒருபோதும் விரும்பியதில்லை என்று கூறுகிறார் தஸ்லிமா நஸ் ரீன் .

தனது பேச்சுரிமை, எழ்த்திற்கான உரிமை என்ற முழக்கங்களினால் அது சர்ச்சைக்குள்ளாகி அதனால் தனது நூல்கள் விற்கப்படுவது தனக்கு பிடித்தமானதாக இல்லை என்கிறார் தஸ்லிமா.

புதனன்று கொல்கட்டா சர்வதேச புத்தக விழாவில் இவரது இந்த நூலை ஒரு விழாவாக்கி அறிமுகம் செய்ய நினைத்தனர் புத்தக வெளியீட்டாளர்கள் ஆனால் அதற்கான ஆடிட்டோரிய அனுமதி கிடைக்கவில்லை.

இருப்பினும் புத்தக விழாவில் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தாரின் கடையின் முன்பு இந்த புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மணிநேரத்தில் 100 பிரதிகள் விற்றதாக பதிப்பகத்தார் கூறியுள்ளனர்.

ஆடிட்டோரியத்தை புத்தக விழா ஏற்பாடு செய்தவர்கள் தர மறுத்துள்ளனர். அதாவது இந்த விழாவை நடத்தக் கூடாது என்று தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் அறிமுக விழா நிறுத்தப்பட்டது என்று தெரிகிறது.

நிர்பசன் என்ற இந்த புத்தகம் அவரது சுயசரிதைத் தொடரின் 7வது வால்யூம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு நகரத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்