திருவண்ணாமலை தீபத்திருவிழா இன்றுடன் நிறைவு! 11 நாட்கள் காட்சியளிக்கும் மகாதீபம்!

வியாழன், 30 நவம்பர் 2023 (10:05 IST)
திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்று வரும் தீபத்திருவிழா இன்று முடிவடைகிறது.



கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்திருவிழா பல சிறப்புகள் வாய்ந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமான திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

கடந்த 17ம் தேதி தொடங்கிய தீபத்திருவிழாவில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா, இரவில் விநாயகர், முருகர் வீதி உலா நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக கடந்த 26ம் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் மகாதீபமும் ஏற்றப்பட்டது.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் கடந்த 27ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம், ஆகியவை நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சண்டிகேஸ்வரர் தெப்பல் உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் என்பதால் விழா முடிந்தாலும் பக்தர்கள் வருகை அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்