ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மீனம்

Prasanth K

வியாழன், 31 ஜூலை 2025 (18:13 IST)
அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது -  சப்தம களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  புதன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025  அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  சனி சஞ்சாரம் பலவகையிலும் வருமானத்தை பெற்று தரும். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். ஆனால் கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.

சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

பூரட்டாதி:
இந்த மாதம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம்.  உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நவீனமுறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால்  தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

ரேவதி:
இந்த மாதம் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 01, 02, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 10, 11, 12

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்