அவதூறு பரப்பும் யூடியூப் வீடியோக்கள் கண்காணிக்கப்படுகிறது: தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவிப்பு..!

வெள்ளி, 5 மே 2023 (10:51 IST)
அவதூறு பரப்பும் யூடியூப் வீடியோக்கள் கண்காணிக்கப்படுகிறது என  தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவித்துள்ளது.
 
ட்விட்டர், ஃபேஸ்பும், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு அறிவித்துள்ளது.
 
மேலும் அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும், அதேபோல் 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்