டி.டி.எஃப். வாசன் வங்கி கணக்கு திடீர் முடக்கம்: என்ன காரணம்?

Siva

ஞாயிறு, 9 மார்ச் 2025 (13:31 IST)
பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன்  வங்கி கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டி.டி.எஃப். வாசன்  அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, கடந்த ஆண்டு திருப்பதி மலைக்கு சென்றபோது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்தபோது வீடியோ எடுத்து பதிவு செய்தார். இதற்காக கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, திருமலை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், டி.டி.எஃப். வாசன்  வங்கி கணக்கை திருமலை போலீசார் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது வழக்கறிஞர் முத்து உறுதி செய்துள்ளார்.
 
மேலும், டி.டி.எஃப். வாசன்  தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அணுகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டி.டி.எஃப். வாசன்  மீது சில வழக்குகள் இருப்பதால், முன் ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்