கஞ்சா வழக்கில் தேடப்பட்ட யூட்யூப் பிரபல மீனவர்! – நீதிமன்றத்தில் சரணடைந்தார்!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (09:34 IST)
கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த யூட்யூப் பிரபல மீனவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

நாகை மீனவன் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி கடல் பயண வீடியோக்களை போட்டு வருபவர் குணசீலன். கடந்த 26ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குணசீலன் படகிலிருந்து 2 கோடி மதிப்புள்ள 240 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுத்தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் குணசீலன் உள்ளிட்ட 4 பேர் தலைமறைவானார்கள். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நான்கு பேரும் தற்போது தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த நால்வரையும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்