காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூருக்கு அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அதை அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த 7 பேர், அப்பெண்ணை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளனர். மேலும், அந்த வாலிபரை தாக்கி, அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு, அப்பெண்ணை 7 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.