தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:02 IST)
தமிழ்நாடு கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என்பதும் இதனால் கேரளாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வரும் நிலையில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280ஐ தாண்டி உள்ளது.

இந்த நிலையில் கேரளத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்,  எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது

மேலும் தமிழ்நாடு கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்த இரு மாநிலங்களில் சில இடங்களில் ஏழு முதல் 11 செமீ மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்