அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செலுத்தவில்லையே ஏன்?-பிஷ்மி

திங்கள், 11 செப்டம்பர் 2023 (18:41 IST)
இமானுவேல் சேகரனின்  நினைவுதினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏன் மரியாதை செலுத்தவில்லை என சினிமா விமர்சகர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமாநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் ஆவார்.

அவரது  நினைவு தினத்தையொட்டி இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதைச் செலுத்தினர்.

இந்த நிலையில், ஒவ்வொரு பண்டிகை மற்றும் நிகழ்ச்சிக்கும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள்  மற்றும் நினைவு நாளுக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்  தலைவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வர்.

இந்த நிலையில், இன்று தியாகி இமானுவேல் சேகரனின்  நினைவுதினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏன் மரியாதை செலுத்தவில்லை என சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில்,

''தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செலுத்தவில்லையே ஏன்?'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்