உலக மோட்டார் சைக்கிள் வல்லுனார்கள் தினம் - மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

திங்கள், 29 மே 2023 (15:00 IST)
கோவை மேற்கு பகுதி மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை சங்கம் சார்பாக உலக மோட்டார் சைக்கிள்  வல்லுனர்கள் தினத்தை முன்னிட்டு தலைவர் G.P ராதா தலைமையில் பட்டாசுகள் வெடிக்கும், கேக் வெட்டியும், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். பின்னர் சங்கத்தின் செயலாளர் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்
 
 புதிய வாகனங்களுக்கு பயிற்சி முகாம் அரசு சார்பில் நடத்திட வேண்டுமென்றும், குழந்தை தொழிலாளர் வயது வரம்பு 18ல் இருந்து 16ஆக குறைக்க வலியுறுத்தியுள்ளதாகவும்,அதற்கு காரணம் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு ஐ.டி.ஐ செல்லும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் வாகன பயிற்சியை கற்றுக் கொடுக்க ஏதுவாக இருக்கும் என்பதனால் இந்த கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர். 
 
அதேபோல் நல வாரியம் மூலம் எங்களுக்கு புதிய வாகனங்களுக்கு உண்டான பழுது பார்க்கும் கருவியை வழங்க வேண்டும் என்றும்,வரும் காலங்களில் அகில இந்திய முழுவதும் உலக மோட்டார் சைக்கிள் வல்லுனர்கள் தினத்தை கொண்டாடுவதற்கான முயற்சியை மாநில சங்கம் மூலம் செய்ய போவதாக தெரிவித்தார். இதில் இணைத்தலைவர்       G.P. சிவா,பொதுச் செயலாளர் லோகேஷ், பொருளாளர் அம்மன்மூர்த்தி, செயலாளர் ராஜ், கௌரவ நிர்வாகிகள் மருதாச்சலமூர்த்தி, பிரேம்ஆனந்த், துணைச்செயலாளர் நடராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள், என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்