மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது?

சனி, 8 ஜூலை 2023 (19:39 IST)
தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வெளியாகி உள்ளது. 
 
இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. 
 
மேலும் வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்ற சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. 
 
மேலும் திருமணம்  குறித்த நிலை, தொலைபேசி எண், முகவரி, வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களும் அதில் கேட்கப்பட்டுள்ளன
 
அதேபோல் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் அட்டை ரசீது மற்றும் வங்கி பாஸ்போர்ட் புத்தகம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்