ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி கணவரை விட்டுப் பிரிந்து வாழும் சென்னையைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இதில் ஒரு மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது சென்னையில் அண்ணாநகரில் உள்ள புஜ்ஜியம்மாள் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்துவந்துள்ளார்.
அவர்களைக் கைது செய்த போலிஸார் திருடிய பணத்தைக் கேட்டபொது, அதை வைத்து மகளின் திருமண செலவுக்காக வாங்கிய கடனை அடைத்துவிட்டதாக சொல்லியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 5000 ரூபாயை போலிஸார் கைப்பற்றினர்.