வேலூரில் ரயில் சென்ற பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகி ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை - திருப்பதி இண்டெர்சிட்டி ரயிலில் சென்ற ஆந்திராவை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணை ஒரு ஆள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசு இறந்துவிட்டதால், அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பெண்ணுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான சிகிச்சைகளும் நடந்து வரும் நிலையில் அவர் தொடர்ந்து ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஹேமராஜ் என்பவரை போலீஸார் கைது செய்திருந்த நிலையில் அவர்மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இளம்பெண் நலமுடன் திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், குற்றவாளிக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகிறது.
Edit by Prasanth.K