தி.நகரில் பரபரப்பு: ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்த பெண் பத்திரிக்கையாளர்

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:25 IST)
சென்னை தி.நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் பத்திரிக்கையாளர் அறையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தி.நகரில் கடந்த 27 ஆம் தேதி மதியம் வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் தன்னை பத்திரிகையாளர் என அறிமுகம் செய்துக்கொண்டு குறிப்பிட்ட ஹோட்டலில் 30ம் தேதி வரை தங்கப்போவதாக் கூறி தங்கியுள்ளார். 
 
ஆனால், 31 ஆம் தேதி மதியம் ஆகியும் அவர் செக் அவுட் செய்யாமல், இருந்ததால் அறை ஊழியர் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் மாற்றுச்சாவியை எடுத்து சென்று திறந்து பார்த்த போது படுக்கையில் அப்பெண் பிணமாக கிடந்துள்ளார். 
 
உடனடியாக இதுகுறித்து மாம்பலம் போலீஸாருக்கு விடுதியிலிருந்து புகார் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த அறையில் விஷ பாட்டில் ஒன்று கிடைத்துள்ளது. 
 
எனவே, அந்த பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்த வெளிநாட்டு பெண் பெயர் லிண்டா இரேனா என்பதும், அவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்