சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் திமுக அனுதாபி என கூறப்பட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நீதிமன்றம் நியமித்துள்ள நிலையில், அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணை செய்ய, புலனாய்வு குழு தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஏழு நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.