கடைசியில கமல் யாரு கூடதான் கூட்டணி வைப்பாரு...?

புதன், 5 டிசம்பர் 2018 (16:18 IST)
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். மேலும், இந்திய 2 தனது கடைசி படமாக இருக்கும் எனவும் அறிவித்தார். 
 
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி துவங்கிய புதிதில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அப்பொது அவர் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என கூறப்பட்டது. 
 
ஆனால் திமுக கமலை கண்டுகொள்ளாமலேயே இருந்துவிட்டது. அதன் பின்னர் திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைய கூடிய வாய்ப்பு உள்ளதாக் பேட்டி ஒன்றி கூறினார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தயார் என்றும் குறிப்பிட்டார். 
இதன் பிறகு திமுக - காங்கிரஸா? அல்லது கமல் - காங்கிரஸா? என்ற நிலையை உருவாக்கி விட்டார். இதுவரை கமல் டிடிவி தினகரனையும், அன்புமணியையும் விமர்சித்து பேசியதில்லை.
 
ஒருவேளை இவர்களுடன் கூட்டணி வைப்பாரா என்று யோசித்தால் அப்போது முதலமைச்சர் பதவிக்கு பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கமல் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது அவர் தகவல் வெளியிடும் வரை தெரியப்போவதில்லை. 
 
கமல் அடிக்கடி கேரளா போவத பாத்தா கடைசியில பினராயி விஜயனுடன் கூட்டணி வச்சிருவாறு போலயே....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்