காஞ்சி சங்கர மடத்தின் 71 வது பீடாதிபதியாக இன்று சந்திர சேகர் சரஸ்வதி சாமிகள் பதவி ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, சுப்பிரமணியன் சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன் பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கேட்கிறீர்கள், அது குறித்து எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் அமித்ஷா சந்திப்புக்கு பின் நேராக இங்கே தான் வந்திருக்கிறேன் என்றும் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்றும் தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் தேர்தல் பணியை திமுக ஆரம்பித்திருக்கலாம் என்றும் ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.