கைது ஆவாரா ஜெயேந்திரர்? - நாளை மறுநாள் தீர்ப்பு

புதன், 27 ஏப்ரல் 2016 (11:28 IST)
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர் மீதான கொலை முயற்சி வழக்கில் 29ஆம் தேதி தீர்ப்பை பிறப்பிப்பதாக நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டுள்ளார்.
 

 
சென்னை மந்தைவெளியை சேர்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ்ணனை, கொலை செய்ய முயன்றதாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன் உட்பட 12 பேர் பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. இதில் ரவிசுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார்.
 
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்து விட்டனர். மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த மாதம் ஜெயேந்திரர் உள்ளிட்டோரிடம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
 
இந்நிலையில், இந்த வழக்கு முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை 29ம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்