திமுக ஆட்சி, உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலம்: முதல்வர் ஸ்டாலின்
ஞாயிறு, 26 ஜூன் 2022 (11:34 IST)
திமுக ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜமால் முகமது கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்
அதன் பின் கல்லூரி மாணவர்களிடையே அவர் பேசியபோது இந்த திமுக ஆட்சி காலம் உயர்கல்வியின் பொற்காலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பள்ளிக் கல்வியில் காமராஜர் ஆட்சியும் , கல்வியில் கலைஞர் ஆட்சியும் பொற்காலமாக இருந்தது என்று அதேபோல் தற்போது திமுக ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்