நிர்வாணமாக இருந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்: சென்னையில் பரபரப்பு

செவ்வாய், 24 மே 2022 (07:45 IST)
நிர்வாணமாக இருந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்: சென்னையில் பரபரப்பு
 சென்னையில் நிர்வாணமாக இருந்த கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண் ஒருவர் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை புரசைவாக்கத்தில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டில் அசோக் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது 
 
இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள் சந்தேகமடைந்து உடனடியாக காவல் துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தந்தை நிர்வாணமாக சடலத்துடன் இருப்பதும் அவரது அருகில் தாய் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
 
இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வந்தது. கணவனின் சடலத்துடன் 2 நாள் இருந்த மனைவி குறித்த தகவல் புரசைவாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்