காங்கிரஸ் நடத்தும் யாகத்தை வீரமணி ஏன் கேள்வி கேட்கவில்லை? தமிழிசை

புதன், 22 மே 2019 (19:25 IST)
மழைக்காக யாகம் நடத்தியதை கேலி செய்த கி.வீரமணி, தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் நடத்தும் யாகம் குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ய யாகம் நடத்துமாறு அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி யாகம் செய்தால் மழை வருமா? இது என அறநிலையத்துறையா? அல்லது புரோகித துறையா? என கிண்டலடித்திருந்தார்.
 
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகம் குறித்த போஸ்டர்களில் மு.க.ஸ்டாலின் படமும் உள்ளது. இதனை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் நடத்தும் யாகம் குறித்து கி.வீரமணி ஏன் கேள்வி கேட்கவில்லை? யாகம் வளர்த்தால் மழை வருமா என கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே சென்றனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபோது வாக்கு இயந்திரம் மீது வராத சந்தேகம் இப்போது வருவது ஏன்? என்றும் அவர் கூறியுள்ளார். தமிழிசை கூறியது போலவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றபோது வாக்கு இயந்திரன் குறித்து எதிர்க்கட்சிகள் எந்த கேள்வியையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்