எடப்பாடியே முதல்வராக இருக்கும்போது ஸ்டாலின் வர கூடாதா? துரை முருகன்

ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (19:31 IST)
எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக இருக்கும் போது எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர கூடாதா? என திமுக முன்னாள் அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
 

 



திமுக முப்பெரும் விழா மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில் கல்வி பரிசு வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் துரை முருகன் கூறியதாவது:-
 
அதிமுகவினர் ஸ்டாலினை கட்சியின் தலைவர் இல்லை. அவர் செயல் தலைவர் தானே என விமர்சனம் செய்து வருகின்றனர். ஜெயலலிதா மறைந்ததில் ஏற்பட்ட அதிர்ஷடமும், சசிகலா போட்ட பிச்சையால்தான் இன்று எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.  
 
எடப்பாடியே முதல்வராக இருக்கும் போது எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வர கூடாதா?. எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வர் என ஆங்கிலத்தில் எழுதி காண்பித்தால் நாங்கள் முதல்வர் என ஒத்துக் கொள்கிறோம் என்றார்.
 
மேலும் மோடி ஆசி இருந்த காரணத்தினால் எடப்பாடி முதல்வரானார் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்