ஆருத்ரா கோல்டு மோசடி.. கைதான ரூசோவுக்கு ஜாமின் ரத்து.. உடனடியாக சரணடைய உத்தரவு..!

Mahendran

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (17:38 IST)
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மூலம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து 3 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது,.
 
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் அடுத்த  3 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்